உள்ளூர் செய்திகள்

மாணவி ஒருவருக்கு நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் பரிசு வழங்கிய காட்சி.

காமராஜர் பிறந்தநாள் விழா- பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு

Published On 2022-08-17 09:04 GMT   |   Update On 2022-08-17 09:04 GMT
  • விழாவிற்கு சுரண்டை காமராஜர் நற்பணி இயக்க தலைவர் வழக்கறிஞர் சின்னதம்பி தலைமை தாங்கினார்.
  • வெற்றி பெற்ற 60 பேருக்கு சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் பரிசு வழங்கி பாராட்டினார்.

சுரண்டை:

சுரண்டை காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா சுரண்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

சுரண்டை காமராஜர் நற்பணி இயக்க தலைவர் வழக்கறிஞர் சின்னதம்பி தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் இணைச் செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் நாகரத்தினம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் கலைச்செல்வன் வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் கனகராஜ் சிறப்புரையாற்றினார்.

விழாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி,ஒவியம், நடனம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 60 பேருக்கு சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் பரிசு வழங்கி பாராட்டினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜெயபால், ஊர் கமிட்டி நிர்வாகி பால்சாமி, வார்டு கவுன்சிலர்கள் ராஜ்குமார், அமுதா சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தபேந்திரன், நாடார் எழுச்சி பேரவை மாவட்ட செயலாளர் மாடசாமி, வியாபாரிகள் சங்கம் செய்தி தொடர்பாளர் ராஜ்குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News