சாம்பவர்வடகரையில் காமராஜர் பிறந்த நாள் விழா
- விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கும் விழா சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரகட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார்.
சாம்பவர் வடகரை:
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா, பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கும் விழா சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரகட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார். சுப்ரமணியன், ஹரிஹர செல்வன், பந்தல் சேர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஆனந்த் காசிராஜன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் மதுரை தமிழ் இலக்கிய மன்ற தலைவர் அவனி மாடசாமி சிறப்புரை ஆற்றினார். தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார், வேலன் காபி காமராஜ், ஜெயச்சந்திரன், திருமலைசாமி, சேவியர் ராஜன், அம்மையப்பன் மற்றும் தேவைப்பட்டணம், ராயகிரி, கொட்டாக்குளம், குத்துக்கல்வலசை, பால மார்த்தாண்டபுரம், அய்யாபுரம், சுரண்டை, சிவகிரி, தெற்குசத்திரம், கடையநல்லூர், விந்தங்கோட்டை ஆகிய நாடார் உறவின்முறைகள் நிர்வாகிகள் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
முடிவில் தமிழ்நாடு நாடார் உறவின் உறவினர்கள் கூட்டமைப்பின் தலைவர் லூர்து நாடார் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முருகேசன், மோகன், மாரியப்பன், பரமசிவன், விஜயன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.