உள்ளூர் செய்திகள்

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம் நினைவு பரிசு வழங்கியபோது எடுத்த படம் 

தேர்தல் நேரத்தில் தி.மு.க.அளித்த வாக்குறுதிகளான பெண்களுக்கு மாதம் ரூ.1000, பேரூராட்சிகளில் 100 நாள் வேலைதிட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை

Published On 2023-01-20 08:12 GMT   |   Update On 2023-01-20 08:12 GMT
  • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
  • எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சுசீந்திரம் கீழ ரதி வீதியில் நடந்தது.

கன்னியாகுமரி:

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி. ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சுசீந்திரம் கீழ ரதி வீதியில் நடந்தது.

கூட்டத்துக்கு அகஸ் தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் ஜெஸீம் தலைமை தாங்கி னார். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொடைவள்ளல் எம்.ஜி.ஆர். என்ற மாமனிதர் உருவாக்கிய இயக்கம்தான் அ.தி.மு.க. இந்த இயக்கத்தின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவில் இந்த இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து பணியாற்றி வந்த மூத்த கழக முன்னோடிகளுக்கு இன்று பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் பெயரை சொல்லாத அரசியல் கட்சித் தலைவர்களே கிடையாது. இப்போது இருக்கிற முதல்-அமைச்சர் கூடதான் ஒரு எம்.ஜி.ஆரின் ரசிகர் என்றும் எம்.ஜி.ஆர். எனது பெரியப்பா என்றும் சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு ஒரு மாமனிதராக எம். ஜி.ஆர். திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்போம் என்று சொன்னார்கள். இதுவரை கொடுக்கவில்லை. அதேபோல ஊராட்சிகளை போல் பேரூராட்சிகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை அந்த திட்டமும் நிறைவற்றப்படவில்லை.

வருகிற பாராளு மன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் பாரதிய ஜனதாவுடன்தான் அ.தி.மு.க. தொடர்ந்து கூட்டணி வைத்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. என்றும் யாருக்கும் துரோகம் செய்யாது. இவ்வாறு அவர் பேசி னார்.

கூட்டத்தில் கன்னியா குமரி சட்டமன்ற தொகுதியில் உள்ள அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 மூத்த கழக முன்னோடிளுக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கவுரவப்படுத்தினார்.

கூட்டத்தில் அகஸ தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம் வரவேற்றுப் பேசினார். முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், தோவாளை பஞ்சாயத்து யூனியன் தலைவி சாந்தினி பகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், பேரூர் கழகச் செயலாளர்கள் குமார், ராஜபாண்டியன், மணிகண்டன், தாமரை தினேஷ், சீனிவாசன் மனோகரன், ஆடிட்டர் சந்திரசேகரன், ஊராட்சி செயலாளர்கள் செல்லம்பிள்ளை, லீன், தேரூர் பேரூராட்சி தலைவி அமுதாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுசீந்திரம் நகர செயலாளர் குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News