கேரள ஜெயிலில் இருக்கும் 16 குமரி மீனவர்களை விடுவிக்க வேண்டும்
- கலெக்டரிடம் உறவினர்கள் மனு
- அவர்கள் குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டி னம் மீன்பிடித்துறை முகத்தில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந்தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காக 20 மீனவர்கள் சென்றனர்.
21-ந்தேதி இவர்கள் 20 பேரையும் போதைப் பொருள் கடத்தியதாக காவல்துறையினர் கைது செய்து எர்ணாகுளம் மட்டன் சேரி சிறையில் விசாரணை கைதிகளாக வைத்திருந்தார்கள் விசாரணை அடிப்படையில் 16 பேர்கள் தாங்கள் மீன் பிடிப்பதற்காக தான் சென்றோம் என்று கூறிய நிலையில் அவர்களை உணவு பொருள் கொண்டு வருவதாக கூறி சிலர் ஏமாற்றி சிக்கலில் மாட்டி விட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான குற்ற பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலும் கடந்த பல மாதங்களாக சிறையில் உள்ள அவர்கள் நீதிமன்றத்தால் இதுவரையிலும் விசாரிக்கப் படவில்லை. 16 மீனவர்களுக்கும் குற்ற வாளிகளுடன் தொடர்பு இல்லை என்று தெரி விக்கப்பட்ட பின்னரும் தற்போது 16 மீனவர்களும் சாட்சி கைதிகளாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள் ளார்கள் எனவே 16 மீன வர்களையும் விடு விப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்று அவர்க ளது உறவினர்கள் நாகர்கோ விலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தினார்.