உண்டியல் கொள்ளை நடந்த கிறிஸ்தவ ஆலயத்தில் 2 கைரேகைகள் சிக்கியது
- தனிப்படை போலீசார் விசாரணை
- கண்காணிப்பு காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு
கன்னியாகுமரி:
சுசீந்திரம் அருகே அக்கரை கடைத்தெருவில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள 2 உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து இருந்தனர். அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
இது குறித்து தலைவர் கபிரியல் ரவி, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். அப்போது கோவிலில் 2 கைரேகைகள் சிக்கியது.
அந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களின் கைரேகைகளோடு ஒப்பிட்டு பார்த்து வரு கிறார்கள். மேலும் கொள்ளை யர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக ஆலயங்களை குறிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வரு கிறார்கள். எனவே அதே கொள்ளையர்கள் இங்கும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.