உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட வழிப்பறி கொள்ளையர்களை படத்தில் காணலாம் 

மார்த்தாண்டத்தில் என்ஜினீயர்களை தாக்கி பணம் பறித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது

Published On 2023-01-07 07:41 GMT   |   Update On 2023-01-07 07:41 GMT
  • மார்க்கெட்டின் பின்புறம் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டல்
  • பெற்றோருக்கு போன் செய்து மிரட்டி, ‘ஜிபே’ மூலமும் பணம் பறிப்பு

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் மஞ்சாலு மூடு நாரகத்தின் குழி பகுதி யைச் சேர்ந்த ஜிஸ்னு (வயது 26), சுர்ஜித் (22) ஆகியோர் பெங்களூருவில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியர்களாக பணி புரிந்து வருகின்றனர்.

இவர்கள் புத்தாண்டை முன்னிட்டு மார்த்தாண்டம் படர்ந்த பாறை பகுதியில் உள்ள தங்களது நண்பர் சோனு ஜோஸ்பின் வீட்டிற்கு வந்தனர். கடந்த 4-ம் தேதி ஜிஸ்னு, சுர்ஜித் இருவரும் இரவு 11.30 -மணி அளவில் மார்த்தாண்டம் சென்று விட்டு மார்க்கெட்டின் பின்புறம் உள்ள வழி வழியாக நடந்து சென்ற னர்.

அப்போது 5 பேர் கும்பல் அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளது. மேலும் அந்தக் கும்பல் 2 பேரையும் தாக்கி மலைப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது. அங்கு வைத்து பணத்தை பறித்துக் கொண்டதோடு, அவர்களது பெற்றோருக்கு போன் செய்து மிரட்டி, 'ஜிபே' மூலமும் பணம் பறித்து உள்ளனர்.

பின்னர் 2 வாலிபர்களின் செல்போன்களை பறித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்று விட்டது. இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி, மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜெனால்ட் (27) என்பவரை கைது செய்தனர்.

மேலும் தலை மறைவாக இருந்த 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு மார்த்தாண்டத்தை அடுத்த ஆளுவிளை குமாரதாஸ் என்பவரின் மகன் அஜின் மோன்ஸே (23), மார்த்தாண்டம் கொடுங் குளத்தை சேர்ந்த பீட்டர் ரகு ராஜ் என்பவரது மகன் சிபின் இம்மானுவேல் (22), பாகோடு ஒற்றை விளைைய சேர்ந்த தேவசகாயம் மகன் அஸ்வின் (19 ) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News