உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

இரணியல் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

Published On 2022-12-28 07:19 GMT   |   Update On 2022-12-28 07:19 GMT
  • 600 கிராம் கஞ்சா, ஒரு எலக்ட்ரானிக் எடை மெஷின், சிறிய கவர்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் பறிமுதல்
  • மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் கஞ்சா பல இடங்களில் விற்கப்படுவதாக போலீ சாருக்கு புகார்கள் வந்தன. இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர விட்டார்.

இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால சுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று காலை கண்ணாட்டு விளை சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 4 வாலிபர்கள் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

இதனை தொடர்ந்து போலீசார் 4 பேரையும் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. 4 பேரிடம் இருந்தும் 600 கிராம் கஞ்சா, ஒரு எலக்ட்ரானிக் எடை மெஷின், சிறிய கவர்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் மணவாளக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் (வயது 28), கக்கோடு அஜித் (27), தாணுதாஸ் (35), குருந்தன் கோடு காளிதாஸ் (23) என தெரிய வந்தது.

Tags:    

Similar News