உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திற்குள் நுழைய முயன்ற மோட்டார் சைக்கிள்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த போது எடுத்தப்படம்.

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நுழையும் வாகனங்களுக்கு ரூ.500 அபராதம்

Published On 2022-12-14 09:58 GMT   |   Update On 2022-12-14 09:58 GMT
  • போக்குவரத்து போலீசார் சோதனை
  • பஸ் நிலையத்திற்குள் நிறுத்தபட்டிருந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் போக்குவரத்து விதிமுறை களை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். நேற்று நாகர்கோவில் நகரம் முழுவதும் போலீசார் அபராதம் விதித்தனர்.

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திற்குள்ளும் இருசக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொது மக்களுக்கு இடைஞ்சலாக வும் இருச்சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரை தொடர்ந்து போக்கு வரத்து போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பஸ் நிலை யத்திற்குள் நிறுத்தப்பட்டி ருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக காலை முதலே போக்கு வரத்து போலீசார் சோதனை மேற் கொண்டனர். நாகர்கோவில் கேப் ரோட்டில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் அண்ணா பஸ் நிலையத்திற்கு உள்ளாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

பஸ் நிலையத்திற்குள் நிறுத்தபட்டிருந்த மோட் டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இன்றும் 25 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலை ஓரங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் இருசக்கர வாகனங்களை அதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News