கேரளாவில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற போது கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் 7 பேர் மீட்பு
- லட்சதீவு பகுதியை சேர்ந்த அப்துல் காசிம் என்பவருக்கு சொந்தமான படகில் கொச்சி துறைமுகத்தில் இருந்து லட்சதீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
- படகில் இருந்த 2000 லிட்டர கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் திடீரென சரிந்து என்ஜின் இருக்கும் பகுதியில் விழுந்ததில் படகு நிலைதடுமாறி கடல் தண்ணீர் படகினில் புகுந்தது.
கன்னியாகுமரி:
கொல்லங்கோடு அருகே ததேயபுரம் பகுதியை சேர்ந்த அனீஷ் மற்றும் நீரோடி பகுதியை சேர்ந்த நபர் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 5, பேர் என மொத்தம் 7 பேர் லட்சதீவு பகுதியை சேர்ந்த அப்துல் காசிம் என்பவருக்கு சொந்தமான படகில் கொச்சி துறைமுகத்தில் இருந்து லட்சதீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
படகு 30 நாட்டிங்கல் தொலைவில் சென்றபோது படகில் இருந்த 2000 லிட்டர கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் திடீரென சரிந்து என்ஜின் இருக்கும் பகுதியில் விழுந்தது. இதில் படகு நிலைதடுமாறி கடல் தண்ணீர் படகினில் புகுந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டனர். இதை பக்கத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த மற்ற மீனவர்கள் கண்டனர் .உடனடியாக அவர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த 7 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அனீஸ் மற்றும் உடன் சென்ற நபர் நேற்று சொந்த ஊர் வந்தடைந்தனர்.