ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி
- களியக்காவிளை அருகே வேகமாகச் சென்ற போது சம்பவம்
- சமூகவலைதளத்தில் வீடியோ வெளியானதால் பரபரப்பு
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் பினு. இவரது மகள் மான்யா (வயது 18).
பாறசாலை பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரி யில் இவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் அரசு பஸ்சில் மான்யா கல்லூரிக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று காலை யும் அவர் நெய்யாற்றின் கரையில் இருந்து கல்லூ ரிக்கு செல்வதற்காக பஸ் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மான்யா, பஸ்சின் கதவு பக்கமாக நின்றார்.
பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் டிரைவர் வேகத்தை அதிகரித்து உள்ளார். ஒரு இடத்தில் எதிரே வந்த வாகனத்துக்கு வழி கொடுப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்பி உள்ளார்.
அப்போது பஸ்சின் கத வோரம் நின்ற மான்யா, நிலை தடுமாறி பஸ்சில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டார். ஆனால் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பஸ் அதி வேகமாக சென்றதாலும் மான்யா தவறி விழுந்தது யாருக்கும் தெரியவில்லை.
பஸ் டிரைவருக்கும் இதுபற்றி தெரியாததால் அவரும் பஸ்சை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். இதற்கிடையில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்த மாணவி மான்யா வை அக்கம் பக்கத்தினரும் வாகன ஓட்டிகளும் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் மாணவி மான்யா, பஸ்சில் இருந்து தவறி விழுந்ததை சிலர் வீடியோவாக எடுத்து உள்ளனர். அந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு தான் மாணவி மான்யா பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட விவகாரம் பலருக்கும் தெரியவந்தது.டிரைவரின் அஜாக்கிருதையும் அதி வேகமும் தான் சம்பவத்திற்கு காரணம் என்று பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக நெய்யாற்றின்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.