திருவட்டார் அருகே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நர்சிங் மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்
- தாய்-தம்பிகள் பாசப்போராட்டம் நடத்தியும் பலனளிக்கவில்லை
- அவர் மேஜர் என்பதால் போலீசார் வேறு வழியின்றி மாணவியை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த இளம்பெண் வெளியூரில் நர்சிங் படித்து வருகிறார்.
இவரது தந்தை வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாய் மற்றும் 2 தம்பிகள் ஊரில் வசித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். தினமும் தாயாரி டம் செல்போனில் பேசி வந்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் குடும்பத்தி னருடன் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தாயார் அழைத்துப் பார்த்த போது, மாணவியின் போன் சுவிட்ச் ஆப் என தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் கல்லூரிக்கு வந்து விசாரித்தார். அப்போது மாணவி அங்கு இல்லை. மகள் மாயமானது குறித்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் திருவட்டார் போலீசில் மாணவியின் தாயார் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிக்கும் கல்லூரி உள்ள பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மாணவியையும் அவரது காதலனையும் போலீசார் தேடினர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் அந்த மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்தார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாணவி, காதல னுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதற்கிடையில் மகள் போலீசில் தஞ்சம் அடைந்த தகவல் அறிந்து மாணவியின் தாயார், தனது 2 மகன்களுடன் ேபாலீஸ் நிலையம் வந்தார்.
அவர், தனது மகளை சந்தித்து வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவரோ மறுத்து விட்டார். காதலனோடு செல்வதி லேயே உறுதியாக இருந்தார். மாணவியை அவரது தம்பி களும் கண்ணீர் மல்க அழை த்துப் பார்த்தனர்.
ஒரு கட்டத்தில் 2 தம்பி களில் ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இத்தனை பாசப் போராட்டங்கள் நடந்த பிறகும் மாணவியின் மனம் மாறவில்லை. அவர் மேஜர் என்பதால் போலீசார் வேறு வழியின்றி மாணவியை காதலனுடன் அனுப்பி வைத்தார்.