உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூட்டை படத்தில் காணலாம் 

மார்த்தாண்டம் ரெயில் நிலையம் அருகே மண்டை ஓடு-எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு

Published On 2022-12-21 10:01 GMT   |   Update On 2022-12-21 10:01 GMT
  • மீட்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 5 ஆண்டுளுக்கு முன்பு இறந்தவருடையதாக இருக்கலாம்.
  • போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கு கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ெரயில் நிலையம் அருகே முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இங்கு ஏராளமான புதர்களும் உள்ளன.

இதில் ஒரு புதர் அருகே சிலர் சென்ற போது, அங்கு மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதைப் பார்த்த ரெயில்வே பணியாளர்கள், நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் மார்த் தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அங்கு கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், மீட்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 5 ஆண்டுளுக்கு முன்பு இறந்தவருடையதாக இருக்கலாம். இருப்பினும் அது யார்? யாரையாவது கொலை செய்து உடலை இங்கு வீசியிருக்கலாமா? அல்லது தற்கொலை செய்தவர்கள் எலும்புக் கூடா? என விசாரணை நடக்கிறது.இதன் முடிவில் தான் உண்மை தெரியவரும், என்றனர். மார்த்தாண்டம் ரெயில் நிலையம் பகுதியில் எலும்புக்கூடு சிக்கியதால் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News