களியக்காவிளை அருகே மாந்தறை பகுதியில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் கைகளை வெட்டி துண்டாக்கிய வாலிபர்
- கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மாந்தறை பகுதியை சேர்ந்தவர் சஜித் (வயது 39), மீன் பிடி தொழிலாளி.
இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சுதீர். 2 பேரும் ஒன்றாக தான் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். இவர்க ளுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.
நேற்று 2 பேரும் கட லுக்கு சென்று திரும்பி யதும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திர மடைந்த சுதீர், தான் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தியை எடுத்து நண்பர் என்றும் கூட பார்க்காமல் சஜீத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது 2 கைகளின் மணிக்கட்டு பகுதிகளும் துண்டானது. சஜீத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
அவர்களை பார்த்ததும் சுதீர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சஜீத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மாந்தறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருவ னந்தபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அயரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுதீர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மது தகராறில் நண்பரின் 2 கைகளையும் வாலிபர் வெட்டி துண்டாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.