உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றவரை கண்டித்த தொழிலாளியை வழி மறித்து தாக்க முயற்சி

Published On 2023-01-30 08:03 GMT   |   Update On 2023-01-30 08:03 GMT
  • வாலிபர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
  • அவசர போலீஸ் எண் 100-க்கு தகவல் தெரிவித்ததையடுத்து மண்டைக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை

கன்னியாகுமரி:

மண்டைக்காடு அருகே கருமன்கூடலை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க தொழி லாளி ஒருவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் லட்சுமிபுரம் சென்றார். பின்னால் அவரது நண்பர் இருந்தார்.

மோட்டார் சைக்கிளில் கருமன்கூடல் சானலில் மெயின் ரோட்டில் செல்லும் போது மண்டைக்காட்டி லிருந்து லட்சுமிபுரம் நோக்கி வேகமாக 2 மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் சென்றனர். அந்த மோட்டார் சைக்கிள்கள் கருமன்கூடல் தொழிலாளி மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் சென்றது. மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்திய தொழிலாளி வேகமாக வந்த வாலிபர்களை 'பார்த்து போகக்கூடாதா?' என கண்டித்து சென்றார்.

இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் தொழிலாளி யின் மோட்டார் சைக்கிளை துரத்தி சென்று லட்சுமிபுரம் கல்லூரி அருகில் வழிமறித்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இரு தரப்பி னர்களும் கடும் வாக்கு வாதம் செய்தனர். கை கலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பதட்ட மடைந்த அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அவசர போலீஸ் எண் 100-க்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மண்டைக் காடு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். போலீசை கண்டதும் கும்பலில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் பண்ணா மல் உருட்டிக் கொண்டே போனார். மீதி நின்ற வாலிபர்களிடம் சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் வாலி பர்கள் திங்கள் நகர் பகுதியை சேர்ந்த வர்கள் என்பதும், மண்டைக் காட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் திங்கள்நகர் பகுதிக்கு செல்லும்போது தொழிலாளியிடம் தகராறு செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

Similar News