உள்ளூர் செய்திகள்

விஜய்வசந்த் எம்.பி.

குமரி. ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்

Published On 2022-12-14 07:18 GMT   |   Update On 2022-12-14 07:18 GMT
  • தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது
  • பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி பேச்சு

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே கோரிக்கைகள் தொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. பாராளுமன்றத்தில் பேசியதாவது:-

தமிழகத்தையும் குறிப்பாக எனது தொகுதியான கன்னியாகுமரியையும் ரெயில்வே திட்ட வளர்ச்சி பணிகளில் மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. இந்தியா முழுவதும் புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ரெயில்கள் மக்களின் தேவைக்கேற்ப நீட்டிக்கப்படுகிறது.

ஆனால் தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு ரெயில்வே அமைச்சகம் செவி சாய்க்கவில்லை. இந்தியாவின் அனைத்து ரெயில்வே மண்டலங்களும் பயணிகளின் தேவைக்கேற்ப ரெயில்களை நீட்டிக்கிறது. ஆனால் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ரெயில்வே மண்டலம் மட்டும் மக்களின் தேவை களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்குப் பயணம் செய்வதற்கான ரெயில் சேவைகள் இங்கு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக டெல்லி, சென்னை, திருவனந்தபுரம் என அனைத்து ரெயில்வே அலுவலகத்திலும் நான் கோரிக்கைகளை வைத்து வருகிறேன். ரெயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் கோரிக்கைகளை முன்வைத்தேன்.

ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் விரைவு ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தேன். ஆனால் பல காரணங்களைச் சுட்டிக்காட்டி ரெயில்வே நிர்வாகம் இதனை மறுத்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த மக்களுக்குப் பயணம் செய்வதற்கு இரண்டே 2 தினசரி ரெயில்கள் மட்டுமே உள்ளன. இதன் காரணமாக மக்கள் மூன்று மடங்கு பயண கட்டணத்தைச் செலுத்தி தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய நிர்ப்பந்திக்க ப்படுகின்றனர்.

ஐதராபாத்-சென்னை ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பதன் மூலம் கன்னியாகுமரி மக்களுக்கு சென்னை செல்வதற்கும் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வருவத ற்கும் கூடுதலாக ஒரு ரெயில் என்று கோரிக்கையும் நிறை வேற்றப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் வேளாங்கண்ணிக்குச் சென்று பிரார்த்தனை செய்வதற்கு வசதியாக திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரெயில் இயக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்ட த்தின் ரெயில் நிலையங்களில் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்ய வேண்டி யது மிக அத்தியாவசியமான ஒரு கோரிக்கை. மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் 2-வதாக ஒரு ரெயில் நிலையம் இயங்கி வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏதுவுமின்றி ரெயிலுக்காகக் காத்து நிற்கும் பயணிகள், மழைக்காலத்தில் ஒதுங்கு வதற்கு மேற்கூரை கூட இல்லாத ஒரு நிலை இருந்து வருகின்றது.

அது போன்று நாகர்கோவிலின் முக்கிய சந்திப்பான கோட்டாறு ரெயில் நிலையத்தில் தேவையான அளவு கழிப்பறை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் அல்லல்படுகின்றனர். பல ஊர்களில் ரெயில்வே தண்ட வாளத்தை கடக்க மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ரெயில்வே கேட் பல நேரங்களில் மூடப்படுவதால் அவசரத்திற்குப் பயணம் செய்வதற்கு மக்கள் தத்தளிக்கின்றனர்.

ஆகவே எங்கள் கோரி க்கைக்கு ஏற்ப முக்கிய இடங்களில் ரெயில்வே மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும். மந்தமாக நடை பெற்று வரும் ரெயில்வே இரட்டை வழிப்பாதையை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News