உள்ளூர் செய்திகள்

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு அளித்த காட்சி.

பால்குளம் அரசு கல்லூரியில் அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும்

Published On 2023-01-25 07:39 GMT   |   Update On 2023-01-25 07:39 GMT
  • தோவாளை அரசு உயர்நிலை பள்ளி வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கலெக்டரிடம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு

நாகர்கோவில்:

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித் தார். அந்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த பால்குளத்தில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி கொடுக்கப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு பகுதி யில் இருந்து இங்கு குடிய மர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவை யான அடிப்படை வசதி இல்லை. குடிநீர் இல்லாமல் இவர்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், ரேசன் பொருட்கள் வாங்குவதில் இவர்களுக்கு அதிக சிரமம் உள்ளது. அதே போல் இங்கு குடியிருப்போரின் குழந்தைகள் அங்கன்வாடி பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த பகுதியில் நிரந்தர ரேசன் கடை மற்றும், அங்கன்வாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோல, பால்குளம் பகுதியில் அரசு கலை கல்லுாரி செயல்பட்டு வரு கிறது. இந்த கல்லுாரிக்கு என்று மைதானம் இல்லை. மேலும், இருக்கும் இடத்தில் செடி கொடிகள் வளர்ந்து புல் மண்டி காணப்படுகிறது. மேலும், இந்த கல்லுாரியில் கம்ப்யூட்டர் படிப்பு பி.சி.ஏ. உள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் உள்ளனர். எனினும், இவர்கள் படிப்பிற்காக இங்கு ஒரு கணினி கூட கிடையாது. எனவே, புதிய கணினிகள் கல்லூரிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, கல்லுாரி யில் அஞ்சுகிராமம் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராள மானோர் படிக்கின்ற னர். ஆனால் கல்லுாரிக்கு உரிய நேரத்தில் அரசு பஸ் வசதியில்லை. காலை 10 மணிக்கு வகுப்பு கள் தொடங்குகிறது. ஆனால் 10.15 மணிக்கு தான் பஸ் வருகிறது. மாலை 3.30-க்கு கல்லூரி முடிந்து விடும் ஆனால் 4 மணிக்கு பிறகுதான் பேருந்து உள்ளது. எனவே, கல்லுாரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி உரிய நேரத்தில் பேருந்து இயக்க வேண்டும்.

மேலும், மயிலாடி கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற சுய உதவி குழு கடன் தள்ளுபடியில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள குறிப்பிட்ட குழுவை சேர்ந்தவர்களிடம் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்துமாறு நிர்பந்திப்பதாக தெரிகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, தமிழ்நாடு அரசால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப் படுகின்ற அனைத்து பாடப் புத்தகங்களும் தோவாளை அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில் கின்ற வகுப்பறையில் வைக் கப்பட்டுள்ளது. இதனால், மாணவ, மாணவிகள் வளா கத்தில் உள்ள மரத்தடி யில் படிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த புத்தகங்களை வேறு இடங்களுக்கு மாற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இது தொடர்பான அனைத்து மனுக்களையும் பெற்று கொண்ட கலெக்டர் அரவிந்த் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் தோவாளை யூனியன் சேர்மன் சாந்தினி பகவதியப்பன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் ஜெசீம், அஞ்சு கிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டி, மயிலாடி பேரூர் செயலாளர் மனோ கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News