பொதுக்கழிவுகளுடன் மருத்துவ கழிவுகள் கலக்கப்படாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்
- உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலெக்டர் உத்தரவு
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் 18004256750 என்கிற எண்ணில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட அள விலான மருத்துவ கழிவுகள் மேலாண்மை குழு வின் முதல் கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசிய தாவது:-
மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்கள் உயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் - 2016-ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உரிய இசை வாணை மற்றும் அங்கீகாரம் பெறுதல் வேண்டும் .
மாவட்டத்தில் உருவாகும் அனைத்து மருத்துவக் கழிவுகளையும் முறையாக சேகரித்து திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தில் இயங்கும் பொது உயிர் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனம் மூலம் அப்புறப்படுத்த வேண்டும்.
மருத்துவக் கழிவுகளைக் கையாளும் மருத்துவப் பணியாளர்களுக்கு மருத்துவக் கழிவுகளை கையாளும் முறை குறித்து சுழற்சி முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.
பொதுக்கழிவுகளுடன் மருத்துவக்கழிவுகள் கலக்கப்படாமல் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும்.மருத்துவக்கழிவுகள் பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மட்டுமே எடுத்துச் செல்வதையும் பிற வாகனங்களில் எடுத்துச் செல்லாமல் இருப்பதையும் போலீசார் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவக் கழிவுகள் கையாளுதல் குறித்த புகார்களுக்கு பொது மக்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் 18004256750 என்கிற எண்ணில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
கேரள மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகள் வாகனங்களில் வராதவாறு உறுதி செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை சாவடிகளில் கண்காணிக்கவும், கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் வட்டார போக்கு வரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டிய ராஜன், மருத்துவம் மற்றும் சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.