உள்ளூர் செய்திகள்
இரணியல் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் போலீசார் சமரசம் செய்தனர்
- முத்தலக்குறிச்சியில் இருந்து தக்கலை பஸ் நிலையம் வரை ஊரக சாலை மேம்பாடு நிதியில் ஜூலை மாதம் தொடங்கப்பட்ட பணி நிறைவு பெறவில்லை.
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே முத்தலக்குறிச்சி பகுதியில் இருந்து தக்கலை பஸ் நிலையம் வரை ஊரக சாலை மேம்பாடு நிதியில் இருந்து ரூ.49 லட்சம் மதிப்பிலான பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 6 மாதங்கள் கழித்தும் பணி நிறைவு பெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதனை யடுத்து மனோகர் குமார் தலைமையில் பொதுமக்கள் சுமார் 100 பேர் முத்தலக்குறிச்சி சந்திப்பில் சாலை மறியல் செய்ய திரண்டனர். அவர்களிடம் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.