உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

கவுன்சிலர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2023-01-27 09:50 GMT   |   Update On 2023-01-27 09:50 GMT
  • ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதன் காரணமாக ஜவஹர் தெருவில் வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வாதம்
  • ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்பட்டு வருகிறது என மேயர் மகேஷ் விளக்கம்

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி 5-வது உறுப்பினர் உதயகுமார் பேசும்போது, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட அதன் காரணமாக ஜவஹர் தெருவில் வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். இதற்கு மேயர் மகேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது மேயர் மகேஷ் கூறுகையில், ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக்கூடாது.ஆக்கிரமிப்புகள் பாரபட்ச மின்றி அகற்றப்பட்டு வருகிறது .அனைத்து கவுன்சிலர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் தொழிலாளி இறந்ததாக கூறுவது நியாயமற்றது. உரிய ஆதாரத்துடன் பேச வேண்டும். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.முதல் தகவல் அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டு பேசவேண்டும். வேண்டு மென்றே குற்றசாட்டுகளை தெரிவிக்க கூடாது என்று மேயர் மகேஷ் தெரிவித்தார். உதயகுமார் பேச்சுக்கு கவுன்சிலர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கவுன்சிலர் உதயகுமார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது கருத்துக்களை பதிவு செய்ய மன்றத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட் டுள்ளார்.

Tags:    

Similar News