உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகளை படத்தில் காணலாம் 

கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-07 10:04 GMT   |   Update On 2023-02-07 10:04 GMT
  • மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட தற்போது 150 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
  • மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி:

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட தற்போது 150 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. எனவே மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது பெரோஸ்கான் தலைமை தாங்கினார். பேராசிரியர் மனோகர ஜஸ்டஸ், சார்லஸ், சக்திவேல், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் குமார், மாநில குழு உறுப்பினர் லிட்டில் பிளவர் ஆகியோர் பேசினர்.

இதில் ஜோதி, ஜெயானந்த் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் வட்டார கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News