குடிக்க பணம் இல்லாததால் ஏ.டி.எம்.மை உடைத்தேன்
- கைதான வாலிபர் வாக்குமூலம்
- இரணியலில் 3 இடங்களில் கைவரிசை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே திங்கள் நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதே போல் அதேபகுதியில் உள்ள ஜுவல்லரி கடை மற்றும் செல்போன் கடை ஒன்றை உடைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் இரணியல் சப் இன்ஸ்பெ க்டர் பாலசுந்தரம் தலைமை யிலான போலீசார் நெய்யூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.சந்தேகம் அடைந்த போலீசார் அவரை இரணியல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்த போது அவர் கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த இன்னாசி லயோலா (வயது 29) என்பது தெரியவந்தது.
இவர் திங்கள் நகரில் உள்ள ஏடிஎம் மையம், ஜுவல்லரி செல்போன் கடைகளில் கைவ ரிசை காட்டியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் இன்னாசி லயோலாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் கூறுகையில் தனக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் குடிப்பதற்கு பணம் இல்லாததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றேன்.ஆனால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் ஜுவல்லரி மற்றும் செல்போன் கடையை உடைத்ததாக தெரிவித்தார். போலீசார் இன்னாசி லயோலாவை இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.