உள்ளூர் செய்திகள்

களியக்காவிளையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையினர்.

குமரி மாவட்ட எல்லையில் கேரள வாகனங்கள் தீவிர கண்காணிப்பு

Published On 2023-01-10 07:13 GMT   |   Update On 2023-01-10 07:13 GMT
  • இறைச்சி கோழிகளுடன் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
  • பறவை காய்ச்சல் எதிரொலி

கன்னியாகுமரி:

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பறவை காய்ச்சல் பல்வேறு பகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

முதலில் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது திருவனந்தபுரம் மாவட்டத்திலும் இது பரவி உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள், கோழிகள், வாத்துகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதற்கி டையில் பண்ணை களில் கோழிகள் பாதி க்கப்பட்ட தால், அங்குள்ள கோழிகள், வாத்துகளை அழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல், பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது இல்லை என்றாலும், உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவ வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள குமரி மாவட்டம் படர்ந்தாலுமூடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கேரள வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பறவைகள், கறிக்கோழிகள் ஏற்றி வரும் பெரும்பாலான வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றன. சில வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

தற்போது பறவை காய்ச்சல், கேரளாவில் தீவிரமடைந்துள்ளதால், அங்கிருந்து கறிக்கோழிகள், கோழிக் குஞ்சுகள், தீவனம், முட்டை போன்றவை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. படந்தாலுமூடு சோதனை சாவடி யில் 3 குழுக்களும், காக்க விளையில் ஒரு குழுவும் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

Tags:    

Similar News