கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் வீதி உலா
- முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் நடந்தது
- கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட 100 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோ றும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை4-30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது.பின்னர் அபிஷேகமும் தீபாராதனையும்நடந்தது.
மாலை6-30மணிக்கு சாயரட்சை தீபாராதனையும்பின்னர்அம்மன்பலவண்ண மலர்க ளால்அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் அம்மன் வாக னம் வரும்போது அங்கு உள்ள முத்தாரம்மன் கோவிலிலும் வாகன த்தில் ்எழுந்தருளிஇருந்தபகவதி அம்மனுக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடந்தது.
வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து திருக்கணம் சார்த்தி வழி பட்டனர்அதன்பிறகு10-30 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட 100 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.10 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.
இதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், கணக்காளர் ராமச்சந்திரன் திருக்கார்த்திகை மண்டகப்படி கட்டளை தாரர்கள் பாலன், மோகன், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.