உள்ளூர் செய்திகள்

படகுத்துறையில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை கடந்த ஆண்டு 17 லட்சம் பேர் பார்த்துள்ளனர்

Published On 2023-01-01 07:30 GMT   |   Update On 2023-01-01 07:30 GMT
  • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தகவல்
  • கடந்த 6 மாதங்களாக திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை

கன்னியாகுமரி:

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து செல்வது வழக்கம்.

கடந்த 6 மாதங்களாக திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 24 ஆயிரம் பேரும், பிப்ரவரி மாதம் 73 ஆயிரத்து 700 பேரும், மார்ச் மாதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரும், ஏப்ரல் மாதம் ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேரும், மே மாதம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பேரும், ஜூன் மாதம் ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேரும், ஜூலை மாதம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேரும், ஆகஸ்ட் மாதம் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேரும், செப்டம்பர் மாதம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும், அக்டோபர் மாதம் 2 லட்சத்து 11 ஆயிரம் பேரும், நவம்பர் மாதம் 2 லட்சத்து 9 ஆயிரம் பேரும், கடந்த டிசம்பர் மாதம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேரும் படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்துள்ளனர். மொத்தத்தில் கடந்த ஆண்டில் 17 லட்சம் பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்தனர்.

இதில் கடந்த ஆண்டில் டிசம்பர் மாதம் மட்டும் அதிக அளவு அதாவது 2 லட்சத்து 53 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News