சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் நாளை கருட தரிசன நிகழ்ச்சி
- மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது
- திருவெம்பாவை இசை நிகழ்ச்சி நடந்தது.
நாகர்கோவில்:
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் திருவிழாவான நேற்று காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, 8.30 மணிக்கு திருவெம்பாவை இசை நிகழ்ச்சி நடந்தது.
மாலை 5.30 மணிக்கு பக்தி இன்னிசை மற்றும் மண்டகபடிக்கு சுவாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு கற்பக விருச்ச வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா வருதல் நடந் தது. தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங் கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் தனது தாய் தந் தையருக்கு நடக்கும் திருவி ழாவில் பங்கெடுக்கும் 'மக் கள் மார் சந்திப்பு' நிகழ்ச்சி நடந்தது.
4-ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு பூதவாகனத்தில் சுவாமி திரு வீதி உலா நடந்தது. இரவு 10மணிக்கு பக்தி இன்னிசை, 10.30 மணிக்கு மேளதா ளங்கள் முழங்க பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
5-ம் திருவிழாவான நாளை ஜனவரி 1-ந்தேதி காலை 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன், சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை கருடன் வலம் வரும் 'கருட தரிசன நிகழ்ச்சி' நடக்கிறது. 9-ம் திருவிழாவான ஜனவரி 5-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.