உள்ளூர் செய்திகள் (District)

இன்று காலை கணபதிஹோமம் நடந்த காட்சி.

பூதலிங்கசுவாமி கோவிலில் 26-ந் தேதி கும்பாபிஷேகம்

Published On 2023-01-22 10:10 GMT   |   Update On 2023-01-22 10:10 GMT

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று (22-ந் தேதி) காலை தொடங்கியது. காலை 4.30 மணிக்கு மங்கள இசை நடந்தது. இதைத் தொடர்ந்து 5 மணிக்கு கணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை, பூர்ணாகுதி, புண்ணியாக பூஜை தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு நவகிரக பூஜை நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடந்தது.

    இதில் கோவில் கண் காணிப்பாளர் ஆனந்த், ஸ்ரீகாரியம் ஆறுமுக நைனார், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை 7 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 8.30 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை, தீபாராதனை நடக்கிறது.

    நாளை (23-ந்தேதி) காலை 7 மணிக்கு சுதர்சன ஹோமம், கோ பூஜை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு நடக்கிறது. 24-ந் தேதி காலை 7 மணிக்கு அஸ்வ பூஜை, கஜ பூஜை, 8 மணிக்கு தீர்த்த சங்கிரகரணம், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு முதல் கால யாக வேள்வி ஆரம்பம் நடக்கிறது.

    25-ந்தேதி காலை 8 மணிக்கு 2-ம் யாகசாலை கிரிய பூஜை, 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 6.30 மணிக்கு சமய சொற்பொழிவு, 3-ம் கால யாக சாலைகிரிய பூஜை, இரவு 7 மணிக்கு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    26 -ந் தேதி காலை 5 மணிக்கு 4-ம் கால யாகசாலை கிரிய பூஜை யும், 5.30 மணிக்கு பிரம்ம சுத்தி, ஆலயசுத்தி, ரக்ஷ பந்தனம் பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடகம் எடுத்து வருதலும், 7.15 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் மூலஸ்தான மற்றும் பரிவார விமானங்களுக்கு ராஜ கோபுர மகா கும்பாபி ஷேகமும் இதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, மனோதங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருகோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் செய்து வரு கிறார்கள்.

    Tags:    

    Similar News