புளியடி மின் தகன மையத்தில் மேயர் மகேஷ் ஆய்வு
- ஆய்வின்போது என்ஜினீ யர் பாலசுப்ரமணியன், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா ஆகியோர் இருந்தனர்.
- இன்னும் 2 வார காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடடிக்கை
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ராட்சி சார்பில் புளியடியில் மின்சார தகன மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த மூன்று ஆண்டு களாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் புளியடியில் தகன மையத்தில் எல்.பி.ஜி.கேஸ் மூலம் உடலை எரிப்பதற்கான தகன மையம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது.ரூ. 45 லட்சம் செலவில் அதற்கான பணி கள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும் தகன மையத்தில் கிடந்த குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பூங்காவையும் பார்வை யிட்டு மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் குடியிருந்து வரும் மக்கள் தங்களது பகுதிக்கு குடிநீர் வசதி,தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று மேயர் மகேஷிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரியிடம் பேசி உடனடியாக தெருவிளக்கு, குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இதுகுறித்து மேயர் மகேஷ் கூறுகையில், புளியடியில் கூடுதலாக ரூ.45 லட்சத்தில் கேஸ் தகன மைய வேலைகள் நடைபெற்று வருகிறது. c எடுக்கப்படும். புளியடி பகுதியில் உள்ள பூங்காவை மேம் படுத்த நடவடிக்கை மேற் கொண் டுள்ளோம். மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டுவரும் வகையில் அந்த பூங்கா மேம்படுத்தப்படும். குடிசை மாற்று வாரியத்தில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது என்ஜினீ யர் பாலசுப்ரமணியன், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா ஆகியோர் இருந்தனர்.