குமரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்கள்
- சுற்றுலாத்துறை மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள்
- சுற்றுலா வரும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நாகர்கோவில்:
மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை சந்தித்த விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை மனு அளித்தார்.
அதில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை அழகு நிரம்பி வழியும் மாவட்டம். கடற்கரை, அருவிகள், அணைக்கட்டு என சுற்றுலாப் பயணி களை கவர்ந்திழுக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டம், உல கத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற சாத்தி யக்கூறு உள்ளன. ஆனால் போதிய அளவு உட்கட்ட மைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது குறைவாகவே காணப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள சுற் றுலா தலங்களுக்கு எந்த தடையும் இன்றி சென்று வர சாலை வசதிகள் மிக முக்கியமாக தேவைப்படு கிறது. மேலும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையங் கள், தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதும் முக்கிய மாகும். தனியார் நிறுவனங் களுடன் இணைந்து கடல் மற்றும் மலை சார்ந்த பிர தேசங்களில் சாகச விளை யாட்டுக்கள் ஏற்படுத்தி சுற் றுலா பயணிகளை கவர இயலும். மேலும் ரெயில் மற்றும் விமான சேவையும் அவசியம் ஆகும். பிற மாநிலங்க ளில் இருந்து கன்னியாகுமரி வந்து செல்வதற்கான ரெயில் வசதிகள் குறைவாகவே உள்ளதால் சுற்றுலா வரும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அது போன்று கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் அமைந்தால் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு உதவும்.
இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு வகுத்துள்ள பல்வேறு திட்டங்களின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தை இணைத்து சுற்றுலா உட் கட்டமைப்பு வசதிகள் பெருக்குவதற்கு தேவையானவற்றை சுற் றுலாத்துறை செய்து தர நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், விமான நிலையம் அமைக்கவும் அந்தந்த துறைகளுக்கு சுற்றுலா துறையின் மூல மாக பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.