உள்ளூர் செய்திகள்

விஜயகுமார்

மார்த்தாண்டத்தில் தற்கொலை செய்த மினி பஸ் அதிபர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

Published On 2023-02-03 09:59 GMT   |   Update On 2023-02-03 09:59 GMT
  • போலீசார் விஜயகுமார் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என புகார்

கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு மேல்புறம் மணலி விளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67). இவர் மினி பஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

விஜயகுமார், படந்தாலு மூட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மினி பஸ்கள் நடத்துவதற்காக கடன் பெற்றுள்ளார். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்த விஜயகுமார் என்ன செய்வதென்று தெரியாமல், ஒவ்வொரு மினி பஸ்சாக விற்பனை செய்து கடனை செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டில் முகாமிட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் வினேஷ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் மினி பஸ் உரிமையாளர் விஜய குமாரின் உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது மகன் வினேஷ் கந்துவட்டி கும்பலின் மிரட்டலால் தான் தந்தை தற்கொலை செய்து கொண்டார் எனவும்,கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மினி பஸ் உரிமையாளர் விஜயகுமார் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் விஜயகுமார் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இன்று விஜயகுமாரின் உற வினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிட போவதாக தெரி வித்துள்ளனர்.

Tags:    

Similar News