உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் கார்மல் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி சேவியர் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் இன்னாசிமுத்து தொடங்கி வைத்து பார்வையிட்டபோது எடுத்த படம். அருகில் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் பலர் உள்ளனர்.

நூற்றாண்டு விழாவையொட்டி கார்மல் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Published On 2023-01-21 07:47 GMT   |   Update On 2023-01-21 07:48 GMT
  • 100 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
  • மாணவர்களின் 150 அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது

நாகர்கோவில்:

நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான 2 நாள் அறிவியல் கண்காட்சி நேற்று தொடங்கியது. பள்ளி தலைமையாசிரியர் மரிய பாஸ்டின் துரை தலைமை தாங்கினார். ஆசிரியர் அலுவலர் செயலாளர் பபிலன் முன்னிலை வகித்தார். கார்மல் அறிவியல் மன்றத்தின் தலைவர் பாபு சைமன்ராஜ் வரவேற்றார். மாணவர்கள் இறைவணக்கம் பாடினர்.

பள்ளி தாளாளர் ஜெரோம் பேசினார். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி சவேரியார் ஆராய்ச்சி மைய இயக்குனரும் பூச்சியியல் துறை விஞ்ஞானியுமான இன்னாச்சிமுத்து பேசியதாவது:-

மாணவர் பருவம் மகத் தான பருவம். எதனையும் கேள்விகளுக்கு உட்படுத்தி ஆராய்ச்சி செய்து பார்க்கும் பருவமாகும். உலகில் சிறந்த படைப்புகள் அனைத்தும் ஏன்? எதற்கு? எப்படி? போன்ற கேள்விகளை கேட்பதன் மூலமே உருவாகியுள்ளன. எனவே நாம் காணும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கேள்விகளுக்கு உட்படுத்தி அவற்றிற்கான தீர்வுகளை கண்டறிய முயல வேண்டும்.

அதற்கு இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகள் உறு துணையாக அமையும். அறிவியல் தொழில் நுட்பங்கள் இன்றி உலகு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள் தான் மாற்றத்திற்கான அடித்தளமாக உள்ளது. அந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் கண் டு பிடிப்பதற்கு இது போன்ற அறிவியல் கண்காட்சிகள் உந்து சக்தியாக அமையும்.

இந்த கண்டுபிடிப்புகளை பார்க்கும் மாணவர்கள் நாமும் புதியவற்றை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர் டேவிட்ராஜ் எழுதி இசை அமைத்த கார்மல் பள்ளி நூற்றாண்டு விழா இசை சி.டி.யை இன்னாசிமுத்து வெளியிட உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் பெற்றுக் கொண்டார். அறிவியல் கண்காட்சியின் ஒருங்கி ணைப்பாளர் ஜெகசீலன் நன்றி கூறினார். நிகழ்ச்சி களை ஆசிரியர்கள் பினு மோன், ராஜ்குமார் ஆகி யோர் தொகுத்தனர்.

கண்காட்சியில் 100 பள்ளிகளில் இருந்து 150 அறிவியல் கண்டு பிடிப்புகள் காட்சி படுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு கல்லூரிகள் சார்பாக அரங்கம் அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களது படைப்புகள் காட்சி படுத்தப்பட்டு இருந்தன. மேலும் கூடங்குளம் அணு மின் நிலையம், மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை நிறுவனம், கேரளாவில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப கழகம், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், வேளாண்மை துறை, மாவட்ட தொழு நோய் விழிப்புணர்வு திட்ட மையம், தமிழ் நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை சார்பாக அரங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

இந்த கண்காட்சி இன் றும் நடைபெற்றது. இதில் பங்கேற்றுள்ள பள்ளி களில் நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பிரிவு 3 பிரிவுக ளிலும் முதல் 3 இடங் களை பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப் படும். இங்கு வைக்கப்பட்டுள்ள அறிவியல் கண்டு பிடிப்பு களை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவி கள், பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

இதற் கான ஏற்பாடுகளை கார்மல் பள்ளி நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேசுநேசம் தலைமையில், ஆசிரியர், அலுவலர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News