அரசின் தடை உத்தரவை மீறி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் கடை, ஓட்டல்களுக்கு சீல்
- கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
- 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் .
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றும் முயற்சியாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் தாள்கள் ஆகியவற்றை பயன்படுத்த 01.01.2019 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது கன்னி யாகுமரி மாவட் டத்தில் நன்கு குறைந்து வருகிறது. இருப்பினும், சில உணவகங்கள், டீ கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிக்கும் கடைகள் ஆகியவற்றில் அரசின் தடை ஆணையை மீறி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது தெரியவருகிறது.
அனைத்து உணவகங்கள் டீ கடைகள் , மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் முதலிய கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட ஒருமுறை பயன்ப டுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தக்கூடாது என இதன்மூலம் எச்ச ரிக்கப்படுகிறது. ஆய்வின் போது, தடையை மீறி அவ்வாறு உபயோகப்படுத்துவது கண்டறியப்பட்டால் முதல்முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை ரூ.5 ஆயிரமும், 3-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும் என்பது இதன்மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
செய்தித்தாள் முதலிய அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொருட்களை பாதுகாக்கவோ, பொட்டல மிடவோ பயன்படுத்தக்கூ டாது. சூடான வடை, சம்சா போன்ற தின்பண்டங்களை செய்திதாளில் வைத்து எண்ணெய்யை பிழிந்து சாப்பிடும் பொழுது செய்தித்தாளில் படிந்தி ருக்கும், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கார்பன், காட்மியம் . தாலேட் போன்ற கடின உலோகங்களும் சேர்ந்து உண்ணும்பொழுது உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது.
அவை தொடர்ச்சியாக உடலில் சேரும்பொழுது ஜீரண மண்டலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன .
எனவே செய்தித்தாள் மற்றும் அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொ ருள்களை சேமித்து வைப்பதோ , பொட்டலமிட்டு வழங்குவதோ மற்றும் உணவு பொருள்களை உண்ண வழங்குவதோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது .
அவ்வாறு உபயோ கப்படுத்துவது கண்டறியப் பட்டால் அபராதம் விதிக்கப் படுவதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும்.
டீ கடைகள், ஓட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை பயன்படுத்துவது, அச்சிடப் பட்ட தாள்களில் வடை, சம்சா கொடுப்பது போன்றவை தொடர்பாக பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க லாம் .
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.