உள்ளூர் செய்திகள்

வடசேரி பஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு செய்த காட்சி.

வடசேரி பஸ் நிலையத்தில் எஸ்.பி. நேரில் ஆய்வு

Published On 2022-12-16 07:58 GMT   |   Update On 2022-12-16 07:58 GMT
  • கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை
  • கஞ்சா புகார்கள் தொடர்பாக 7010 363173 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா புகையிலை மற்றும் போதை பொருட் கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

மாவட்டம் முழுவதும் தனிபடை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. கஞ்சா மற்றும் குட்கா வழக்கில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருந்தன‌ இதை கண்காணிக்க வடசேரி போலீசுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

இதை தொடர்ந்து வடசேரி போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். காலை, மாலை நேரங்களில் பஸ் நிலைய பகுதிகளில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கஞ்சா விற்ப னை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்று வடசேரி பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

அந்த பகுதியில் உள்ள கடை வியாபாரிகளிடம் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கஞ்சா புகார்கள் தொடர்பாக 7010 363173 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கேட்டு கொண்டார்.

பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது இருள் சூழ்ந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதாக பொது மக்கள் தெரிவித்தனர்.உடனடியாக அந்த பகுதியில் மின்விளக்கு வசதியை ஏற்ப டுத்துவதுடன் ரோந்து பணியை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News