உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

நாகர்கோவிலில் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மோதல்

Published On 2023-01-25 07:05 GMT   |   Update On 2023-01-25 07:05 GMT
  • தடுக்க சென்ற பேராசிரியர் மூக்கு உடைந்தது
  • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

நேற்று காலையில் வழக்கம்போல் கல்லூரி திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. அப்போது கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.மாணவிகள் சிலரும் அங்கு அமர்ந்திருந்தனர். திடீரென மாணவர்கள் இரு தரப்பினராகப் பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்றனர். அங்கு வந்த பேராசிரியர் ஒருவர் இரு தரப்பு மாணவர்களையும் சமாதானம் செய்தார்.அப்போது மாணவர் ஒருவர் திடீரென பேராசிரியரை சரமாரியாக குத்தினார்.இதில் பேராசிரியரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

இதை பார்த்து சக மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். படுகாயம் அடைந்த பேராசிரியரை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி னார்கள்.

படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ள பேரா சிரியரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பேராசிரியர் மீது தாக்குதல் நடந்தது குறித்து கல்லூரி நிர்வாகம் விசா ரணை மேற்கொண்டு வருகிறது. பேராசிரியரை தாக்கிய மாணவன் மீது கல்லூரி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறது.

கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஆசிரியரின் மூக்கு உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News