உள்ளூர் செய்திகள்

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் அலுவலகத்தில் கள மேலாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்

Published On 2023-02-14 09:50 GMT   |   Update On 2023-02-14 09:50 GMT
  • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
  • விவசாயிகளின் நலன் கருதி அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகர்கோவில்:

முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் கோட்டம் கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் அலுவலகத்தின்கீழ் 34 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. நாகர்கோவில் சரக கள மேலாளர் ஜனவரி 31-ந்தேதி ஓய்வு பெற்றார். இந்நிலையில் 34 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயி கள் குழுக்கடன்கள், தனி நபர் கடன்களுக்காக விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

தற்போது தீர்மானத்திற்கு வைக்கப்பட்ட நிலை யில் கடனுதவிகளை வழங்கு வதற்கு அங்கீகரிக்கும் மேலாளர் பணியிடம் நிரப்பப்படாததால் விவசாயிகளுக்கு சுமார் ரூ.5 கோடி வரையிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கக்கூடிய இப்பணம் தேக்கத்திலும், விவசாயிகள் பயன் பெற முடியாத நிலை யிலும் உள்ளது.

இதனால் தனிநபர் கடன், குழுக்கடன் வேண்டி விண்ணப்பித்த விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். எந்த நோக்கத்திற்காக, விவசாயிகள் விண்ணப் பித்தார்களோ அந்த விவசாய கடனுதவிகளை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

விவசாயிகளின் நலன் கருதி, அரசு உரிய நடவடிக்கை எடுத்து கள மேலாளர் பணி இடத்தை காலம் தாழ்த்தாமல் உடனடி யாக நிரப்பவேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News