உள்ளூர் செய்திகள்

பிரின்ஸ் எம்.எல்.ஏ.

மண்டைக்காடு தெப்பக்குளத்தில் நீர் தேக்க கால்வாயை சீரமைக்க வேண்டும்

Published On 2023-02-14 09:41 GMT   |   Update On 2023-02-14 09:41 GMT
  • பிரின்ஸ் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
  • லட்சக்கணக்கான பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படும்.

கன்னியாகுமரி:

பிரின்ஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கூறியுள்ளதாவது:-

குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா வருகிற மார்ச் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது.

மாசிக்கொடையை முன்னிட்டு குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கேரள மற்றும் வெளி மாவட்ட பக்தர்களும் திரளாக மண்டைக்காடு வந்து செல்வர். பக்தர்கள் நீராட மற்றும் புனித கால் நனைப்பதற்கு கோவிலின் மேற்கு பகுதியில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு பேச்சிப்பாறை அணை நீர் பரம்பை இரணியல் கால்வாய் வழியாக பாய்ச்சப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது.

அணை நீர் இரணியல், நெய்யூர், ஆத்திவிளை, பொட்டல்குழி, காஞ்சிர விளை, தலக்குளம், புதுவிளை, திங்கள்நகர், செட்டியார்மடம், கல்லுக் கூட்டம், லட்சுமிபுரம், கருமங்கூடல் ஆகிய சானல் வழியாக மண்டைக்காடு செல்வதால் இந்த பகுதியில் நிலத்தடி நீராதாரம் பெருகுகிறது. இதனால் இந்த பகுதி விவசாயிகள், பொதுமக்களும் பயன் பெறுகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரணியல் அருகே நெய்யூர் பரம்பை என்னுமிடத்தில் இரட்டை ரெயில் பாதைக்காக இரணியல் கால்வாய் துண்டிக்கப்பட்டது.தண்டவாளத்தின் குறுக்கே தொட்டி கட்டப்பட்டது.இந்த தொட்டியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்கூறிய பகுதிகளுக்கு அணை நீர் பாய்ச்ச முடியாமல் உள்ளது. தொட்டியில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை துரிதமாக சீரமைக்க வேண்டும்.

மண்டைக்காடு பக வதியம்மன் கோவில் கொடியேற்று விழாவுக்கு முன்பாக தெப்பக்குளத்தில் நீர் தேக்க வேண்டும்.அதனால் பரம்பை இரணியல் கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுவது அவசியமாகிறது. தெப்பக்குளத்தில் நீரை தேக்கினால்தான் மண்டைக்காட் டிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படும்.பரம்பை இரணியல் கால்வாயை சீரமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் மேற்படி கால்வாயில் ராட்சத குழாய் பதித்து மண்டைக்காடு தெப்பக்குளத்திற்கு நீர் பாய்ச்ச மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News