உள்ளூர் செய்திகள் (District)

திருவள்ளுவர் சிலை வெள்ளை நிறத்தில் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

கன்னியாகுமரியில் வெள்ளை நிறத்தில் மாறிய திருவள்ளுவர் சிலை

Published On 2022-12-02 08:33 GMT   |   Update On 2022-12-02 08:33 GMT
  • சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்
  • பொங்கல் பண்டிகை அன்று சுற்றுலாப் பயணிகள் சிலையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்

கன்னியாகுமரி:

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டுஉள்ளது.

இந்த சிலையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போது பராமரிப்புபணிகள் நடை பெற்றுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிலை முழுவதும் காகித கூழ் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் எப்பொழுதும் கருப்பு நிறத்தில் காணப்படும் சிலை தற்போது வெள்ளை நிறத்தில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டுகளிக்கின்றனர்.

சிலையின் பராமரிப்பு பணி முடிவடைந்து வரு கின்ற பொங்கல் பண்டிகை அன்று சுற்றுலாப் பயணிகள் சிலையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று சுற்றுலாத்துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

Tags:    

Similar News