உள்ளூர் செய்திகள்

அம்மனுக்கு சீர் கொண்டுவந்த பக்கத்து ஊர் அம்மன் பக்தர்கள்.

குலசேகரம், நாகக்கோடு பகுதியில் அம்மன் கோவில் திருவிழாவுக்கு சீர் கொண்டு சென்ற பெண்கள்

Published On 2023-02-13 07:16 GMT   |   Update On 2023-02-13 07:16 GMT
  • விழா 3 நாட்கள் நடக்கிறது.
  • 29 தட்டுகளில் சீர் பொருட்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

கன்னியாகுமரி:

குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் குழிவிளை இசக்கியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா நேற்று தொடங்கியது. விழா 3 நாட்கள் நடக்கிறது.

இந்த கோவிலுக்கு பக்கத்து ஊரில் உள்ள அம்பலத்துவிளை சக்தி பரமேஸ்வரி கோவிலில் இருந்து அம்மனுக்கு பக்தர்கள் சீர் கொண்டு வந்து விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்த சீரில் பெண்கள் முன்னால் விளக்கு ஏந்தி வரிசையாக வர பின் 29 தட்டுகளில் சீர் பொருட்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர். குழிவிளை இசக்கியம்மன் கோவில் அம்மன் பக்தர்கள் சீருடை அணிந்து வந்த அவர்களை வரவேற்று சீரை பெற்றுக்கொண்டனர்.

இது இப்பகுதியில் உள்ள கோவில்களில் முதல் முதலாக நடக்கும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்வை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். வரும் காலங்களில் இந்த நிகழ்வு அனைத்து அம்மன் கோவில்களிலும் நடக்கும் என்று பக்தர்கள் கூறினர். இதனால் ஊர் ஒன்றுமை ஓங்கும், மக்களிடம் பரஸ்பரம், விட்டுக்கொடுத்து செல்லுதல், அன்பு ஏற்படும். இதனால் சுபிட்சம் உண்டாகும் என அம்மன் பக்தர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News