உள்ளூர் செய்திகள்

தர்காவில் சந்தனம் பூசும் காட்சி

350 ஆண்டு பழமையான தர்காவில் சந்தனகூடு திருவிழா: கடற்கரையில் குவிந்த இஸ்லாமியர்

Published On 2023-05-01 17:02 GMT   |   Update On 2023-05-01 17:02 GMT
  • சென்னை, புறநகர் மற்றும் வெளியூர்களில் வந்திருந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
  • சந்தனக்கூடு தேர் முக்கிய வீதிகளின் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் வந்து தர்கா வந்தடைந்தது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரையோரம் அமைந்துள்ள ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா அவர்களின் 350வது வருட கந்தூரி எனப்படும் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொண்டாடப்பட்டது.

இந்த திருவிழாவில் சென்னை, புறநகர் சென்னை மற்றும் வெளியூர்களில் வந்திருந்த இஸ்லாமியர் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அதிகாலையில் நடைபெறும் சந்தனம் பூசும் சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டனர். சந்தனக்கூடு தேர் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் ஊர்வலமாக வந்து தர்கா வந்தடைந்தது.

நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவளம் ஜோனகுப்பம் மஹல்லா இளைஞர் அணி, முஸ்லிம் மீனவ சமுதாய மக்கள் மற்றும் சுன்னத்வர் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News