அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் கண்காட்சி-கலை விழா
- கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட விற்பனையகம் அமைக்கப்பட்டிருந்தது.
- மாணவிகள் தங்களது சொந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
மணவாளக்குறிச்சி ;
வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந் துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் கண்காட்சி மற்றும் கலைவிழா நடை பெற்றது. இந்த விழாவை திருவனந்தபுரத்தை சேர்ந்த திரைப்பட நடிகையான அன்கிதா வினோத் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவகர் தலைமை உரையாற்றினார். அப்போது மாணவிகள் வேலையில்லாதவராக இல்லாமல் சுயதொழில் தொடங்குவோராக மாற வேண்டும். இதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படு கிறது என கூறினார்.
கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி வாழ்த்துரை வழங்கினார். இந்த கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட விற்பனையகம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாணவிகள் தங்களது சொந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
குமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவி கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவிகளுக்கிடை யிலான நடனப்போட்டி நடை பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்க ளையும் கல்லூரியின் தாளாளர் வழங்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில் டி.ஜே. இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை தாளாளர் சுனி கிருஷ்ணசுவாமி, இயக்கு னர் தருண் சுரத், துறை தலைவர்கள், பேரா சிரிய, பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.