களியக்காவிளை அருகே சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - டிரைவர் கைது
- ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதாக தெரிவித்தார்.
- சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
நாகர்கோவில், ஜூன்.24-
குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், வரு வாய் துறை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பொறுப்பு கலா, சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகலாம்பாள் தலைமையிலான போலீசார் படந்தாலுமூடு சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சொகுசு காரையும், காரில் இருந்த 1 டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிப்பட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் களியக்காவிளை ஓட்ட மரம்நெடுவிளை பகுதியை சேர்ந்த சதாம் உசைன் (வயது 29) என்பது தெரிய வந்தது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நாகர்கோவிலில் உள்ள உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். சதாம்உசைனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட னர். ரேசன் அரிசி கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட் டது. இதைத்தொடர்ந்து போலீசார் சதாம்உசைனை ஜே.எம்.-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.