உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட்ட தியாகிகளின் நினைவு சுடர்களை படத்தில் காணலாம்.

கன்னியாகுமரியில் 100 தியாகிகளின் நினைவு ஜோதி சங்கமம் நிகழ்ச்சி

Published On 2022-11-04 07:43 GMT   |   Update On 2022-11-04 07:43 GMT
  • சி.ஐ.டி.யு. மாநில மாநாட்டையொட்டி நடந்தது
  • மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பங்கேற்பு

கன்னியாகுமரி:

சி.ஐ.டி.யூ. தமிழ் மாநில 15-வது மாநாடு கன்னியாகுமரியில்இன்றுகாலைதொடங்கியது. இந்த மாநாடு வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டை யொட்டி நேற்று மாலை 4 மணிக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட தியாகி களின் நினைவு சுடர்கள் சங்கமம் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கு, கலை விழா நிகழ்ச்சி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடைபெற்றது.

இந்தநிகழ்ச்சிக்கு மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் ஜெலஸ்டின் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஜடா ஹெலன் வரவேற்று பேசினார். குமரி மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப் பட்ட 100 தியாகிகளின் நினைவு சுடர்கள் சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சௌந்தர ராஜன் உள்பட முக்கிய மான தலைவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை யொட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

வரவேற்புக்குழு கௌரவ ஆலோசகர் அமிர்தராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் க கனகராஜ், செல்ல சுவாமி, முன்னாள் எம்.பி. பெலார்மின், முன்னாள் எம். எல். ஏ. லிமாரோஸ், மற்றும் நிர்வாகிகள் அகமது உசேன், தாமஸ் பிராங்கோ, நாகராஜன், தங்க மோகன், சிங்காரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News