உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே இன்று அதிகாலை சொகுசு காரில் கடத்திய 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2023-07-16 07:38 GMT   |   Update On 2023-07-16 07:38 GMT
  • வாகனத்தினை சாலையில் விட்டுவிட்டு அருகில் உள்ள வாழைத் தோப்புக்குள் இறங்கி ஓட்டம் பிடித்தனர்
  • அரிசி தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகம் உடையார்விளை கிடங்கில் ஒப்படைக்கபடும்

கன்னியாகுமரி :

தக்கலையில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் ரேசன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பணியில் இருந்த போது இன்று அதிகாலை சுமார் 5.30 மணிக்கு குறும்பனை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு கார் நிறுத்த முற்பட்டபோது நிற்காமல் அதிவேகமாக சென்றது.

வாகனத்தினை பின் தொடர்ந்து துரத்தி சென்ற போது ஆலஞ்சி, கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட விழுந்தயம்பலம், கிள்ளியூர், தொலையாவட்டம், வழியாக விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட கொல்லஞ்சி, இலவு விளை, விரிகோடு மற்றும் அதன் அருகில் உள்ள குக்கிராமங்களுக்கிடையே உள்ள உள் சாலைகள் வழியாக வந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் கடந்து மார்த்தாண்டம் அருகே உள்ள கீழக்காஞ்சிரங்கோடு என்னும் ஊரில் வைத்து வழிமறித்த போது அந்த வாகனத்தினை ஓட்டி வந்த ஓட்டுநர்  மற்றும் வாகனத்தில் இருந்த பெண் ஒருவரும் சேர்ந்து வாகனத்தினை சாலையில் விட்டுவிட்டு அருகில் உள்ள வாழைத் தோப்புக்குள் இறங்கி ஓட்டம் பிடித்தனர். பின்னர் வாகனத்தினை சோதனை செய்த போது அந்த வாகனத்தில் இருக்கைகள் இல்லாமல் நூதன முறையில் ரகசிய அறைகள் அமைத்து, மறைத்து வைத்திருந்த சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர் அரிசியுடன் வாகனத்தினை பறிமுதல் செய்து, கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரிசி தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகம் உடையார் விளை கிடங்கில் ஒப்படைக்கபடும். மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News