கன்னியாகுமரி முத்தாரம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
- அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் மாலையில் சாயராட்சை தீபாராதனை நடந்தது
- பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி வடக்கு ரதவீதியில் மூன்று முகம் கொண்ட முத்தாரம்மன் கோவில் அமைந்துஉள்ளது. இந்தக் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நேற்று இரவு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் மாலையில் சாயராட்சை தீபாராதனை நடந்தது.பின்னர் இரவு7-மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜையை நடத்தினார்கள்.
அதன் பிறகு இரவு 8மணிக்கு விநாயகர், முத்தாரம்மன் மற்றும் அதன் பரிவார தெய்வங்களான ஸ்ரீ உச்சினி மாகாளிஅம்மன், சுடலை மாடசாமி, பலவேசக்கார சாமி, முண்டன் சாமி, பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகளும் விசேஷ பூஜைகளும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.