உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 1200 போலீசார் பாதுகாப்பு

Published On 2023-09-17 06:40 GMT   |   Update On 2023-09-17 06:40 GMT
  • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
  • விநாயகர் சிலைகள் 22, 23, 24-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது

நாகர்கோவில் :

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டா டப்படுகிறது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய இந்து அமைப்புகள் தயாராகி வருகிறது.

இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வீடுகளிலும், பொது இடங்களிலும் கோவில்களிலும் பிரதிஷ்டை செய்யப்படு கிறது.

நாளை (18-ந்தேதி) காலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சிலை களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு காலை, மாலை இரு வேலைகளிலும் பூஜைகள் நடத்தப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் நாளை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள விநாயகர் கோவில்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொ லிக்கிறது. விநாயகர் கோவில்களிலும் சிலை களை பிரதிஷ்டை செய்வ தற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித் துள்ளது. சிலைகளை ஏற்க னவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். உரிய அனுமதி பெற்று சிலைகளை பதிவு செய்ய வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன் படுத்தக்கூடாது. ஓலையால் வேயப்பட்ட கூரையில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூ டாது. பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலைகள் அருகே 2 தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் கண் காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷனுக் குட்பட்ட பகுதிகளில் 2 ஷிப்டுகளாக போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது.

பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 22, 23, 24-ந்தேதி ஊர்வல மாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. சிலை களை கரைப்பதற்கு 10 இடங்களில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

சொத்தவிளை கடற் கரை, கன்னியாகுமரி கடற்கரை, சின்னவிளை கடற்கரை, சங்குதுறை கடற்கரை, பள்ளி கொண்டான் அணை கட்டு, வெட்டுமடை கடற் கரை, மிடாலம் கடற்கரை, தேங்காய்பட்டணம் கடற் கரை, திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு ஆகிய 10 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News