உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.1.45 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள்
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- 35-வது வார்டுக்குட்பட்ட வள்ளளார் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம்
நாகர்கோவில், நவ. 8-
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் ரூ. 1.20 கோடி மதிப்பிட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டுதல், 35-வது வார்டுக்குட்பட்ட வள்ளளார் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி போன்றவை இன்று நடைபெற்றன.
இதேபோல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கேன்டீன் அமைக்கும் பணி யும் இன்று நடைபெற்றது. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர நல அலுவலர் ராம் குமார், மண்டல தலை வர் அகஸ்டினா கோகில வாணி, ஜவகர், செல்வ குமார், மாமன்ற உறுப்பி னர்கள் ராணி, அனந்த லெட்சுமி கலாராணி, பகுதி செயலாளர் சேக் மீரான், துரை, அணிகளின் நிர்வாகிகள் ராஜன், வட்டச் செயலாளர்கள் ராம கிருஷ்ணன், முத்து கிருஷ்ணன், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.