உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் மதுவிற்ற 3 பெண்கள் உட்பட 15 பேர் கைது

Published On 2022-08-16 07:32 GMT   |   Update On 2022-08-16 07:32 GMT

    நாகர்கோவில்:

    சுதந்திர தினத்தை யொட்டி டாஸ்மார்க் கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தது. இதை யடுத்து குமரி மாவட்டத்தில் திருட்டு மது விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத்துக்கு புகார்கள் வந்தது.

    இதனால் மாவட்டம் முழுவதும் சோதனை தீவிர படுத்த அவர் உத்தரவிட்டார். போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது திருட்டு மது விற்பனை செய்து கொண்டிருந்த செல்வி (வயது 52), செல்வசிங் (49), சோபனதாஸ் (49) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 224 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இரணியல் சப்-இன்ஸ் பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமை யிலான போலீசார் பறையன்விளை பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு திருட்டுமது விற்பனை செய்து கொண்டிருந்த பாலகிருஷ்ணன் (63) என்பவரை கைது செய்தனர்.அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையி லான போலீசார் குருந்தன் கோடு பகுதியில் அனுமதியின்றி மதுவிற்ற கஸ்தூரி (65) என்பவரை கைது செய்தார் .அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ராஜாக்கமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் எறும்புக்காடு பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு திருட்டு மது

    விற்பனை செய்து கொண்டிருந்த சுயம்பு லிங்கம் (63) என்பவரை கைது செய்துஅவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அருமனை சப் இன்ஸ்பெக்டர் சாமுவேல் தலைமையிலான போலீசார் நெடுங்குளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது விற்றுக் கொண்டிருந்த இரும்புலி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (63) என்பவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சிதறால் பகுதியில் மதுவிற்ற வேலன் (48) என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமா ரன் தலைமையிலான போலீசார் படந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மது விற்ற சரண் (36) என்பவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 16 மது பாட்டில்கள் மற்றும் 11 ஆயிரத்து 960 பணத்தையும் பறிமுதல் செய்தனர். அம்பலக்காலை பகுதியில் மதுவிற்ற சுனில் வயது (36) என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் 17 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மார்த்தாண்டம் புல்லானி பகுதியில் மது விற்ற முள்ளங்கினாவிளையைச் சேர்ந்த பத்மசீலன் 34 சசிகுமார் 46 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆசாரிப்பள்ளம் சப் இன்ஸ்பெக்டர் மேரிமரிபா தலைமையிலான போலீசார் மேலசூரங்குடி சானல் கரை பகுதியில்மது விற்ற நாராயண மணி (39) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 4 மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

    நேற்று மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மது விற்பனை செய்ததாக 3 பெண்கள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

    Tags:    

    Similar News