உள்ளூர் செய்திகள்

குமரியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது

Published On 2022-07-16 07:04 GMT   |   Update On 2022-07-16 07:04 GMT
  • கடந்த சில நாட்களாகவே தினசரி 15-க்கு மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்
  • ஆறு மாதம் இடைவெளி இருந்தாலே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம்

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று மாவட்ட முழுவ தும் 959 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 60 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தற்பொழுது நாகர்கோவில் பகுதியில் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி 15-க்கு மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இன்றும் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர் வீட்டு தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 21 ஆயிரத்து 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தடுப்பு ஊசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

2-டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் ஒன்பது மாதங்கள் கழிந்த பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட முடியும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆறு மாதம் இடைவெளி இருந்தாலே பூஸ்டர் தடுப்பூசி செலுத்த லாம் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.குமரி மாவட்டத்திலும் அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

நேற்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.நேற்று ஒரே நாளில் சுமார் 1500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏராள மான இளைஞர்கள், இளம் பெண்கள் ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் வந்து தடுப்பூசியை செலுத்தி சென்றனர். குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தாமலும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தாமல் ஏராளமான உள்ளனர். அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த சுகாதா ரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 

Tags:    

Similar News