உள்ளூர் செய்திகள்
அனுமதி இல்லாமல் கேரளாவுக்கு மணல் கடத்தி சென்ற 18 டாரஸ் லாரிகள் பறிமுதல்
- ரூ.13 லட்சம் அபராதம் வசூல்
- குமரி மாவட்ட கனிம வளம் கடத்தல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் நடவடிக்கை
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட கனிம வளம் கடத்தல் பிரிவு சப் - இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் திலீபன். இவருக்கு நேற்று மாலை கேரளாவுக்கு மணல் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சுதாரித்து கொண்டு குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டார்.
அப்போது நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு சென்ற 18 டாரஸ் லாரிகளை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து 18 டாரஸ் லாரிகளையும், ரூ. 13 லட்சம் அபராதமும் விதித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் திடீர் நடவடிக்கையால் கடத்தல் கும்பல் அச்சத்தில் உள்ளனர்.