குமரி மாவட்டத்தில் நடந்த மெகா முகாமில் 19237 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
- 1400 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் காலை 7 மணி முதல் இரவு 7மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- பூஸ்டர் தடுப்பூசி 15,862 பேருக்கு செலுத்தப்பட்டது. நேற்று நடந்த முகாமில் 19,237 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து தீவிர படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.நேற்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது . 1400 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் காலை 7 மணி முதல் இரவு 7மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு அதிகமானோர் வந்திருந்தனர். முதல் டோஸ் தடுப்பூசியை 887 பேரும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 2488 பேரும் செலுத்தி இருந்தனர். பூஸ்டர் தடுப்பூசி 15,862 பேருக்கு செலுத்தப்பட்டது. நேற்று நடந்த முகாமில் 19,237 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் இரண்டாவதுடோஸ் தடுப்பூசி செலுத்தாமலும் முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக பக்கத்தில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.