நாகர்கோவில் மாநகரத்தின் 52 வார்டுகளிலும் ரூ.267.50 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்கப்படும் என மேயர் மகேஷ் தகவல்
- உயர் கோபுர விளக்குகளும் எரியாமல் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநக ராட்சி கவுன்சில் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடந்தது. மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் கள் பேசியதாவது:-
வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 10 வருடத்திற்கு முன்பு பிரசவம் பார்க்கப்பட்டது. அது தற்போது தொல்ல விளைக்கு மாற்றப் பட்டுள்ளது. அதனால் வட்டவிளையில் தொடர்ந்து பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போல் பெண்கள் வந்து செல்வதற்கு பேருந்து இயக்க வேண்டும்.
மாநகர பகுதியில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. மேலும் உயர் கோபுர விளக்குகளும் எரியாமல் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வார்டுகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வரு கிறது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டாலும் சரி செய்வது இல்லை. தெருக்களில் தண்ணீர் ஓடும் நிலை இருந்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வலம்புரி குப்பை கிடங்கில் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 50-வது வார்டு பகுதியில் இரண்டு மாதங்களாக தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது. ஆழ்துளை கிணறுகள் நிறைய உள்ளது. அந்த கிணறுகளில் இருந்து தண்ணீர் வழங்க மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும். களியங்காடு, பனைவிளை பகுதியில் தண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது என்று கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறிய தாவது:-
மின்வாரியத்திற்கு ரூ.5 கோடி பாக்கி உள்ளது. அதனால் புதிய மின் இணைப்புகள் பெறுவதற்கு டெபாசிட் கொடுக்க வேண்டி உள்ளது. இது குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப் படும். மேலும் ரூ.16 கோடி செலவில் தெரு விளக்குகள் மாற்றப்பட்டு எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. மேலும் மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும் மின்வாரியம் கூறி வருகிறது. ஆனால் ஆன்லைனில் கட்டுவதற்கு மாநகராட்சிக்கு சிரமமாக இருக்கிறது. அதனால் காசோலை மற்றும் டி.டி. கொடுத்து சரி செய்வதற்கு மின்வாரிய அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்.
குடிநீர் குழாய்களை சரி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்ப டும். தற்போது குப்பையை அகற்றும் பணியில் 2 இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. இதனை 5 எந்திரங்களாக மாற்றுவதற்கு புதிய டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆழ்குழாய் கிணறுகளை ஆய்வு செய்து நல்ல நிலைமையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும். இது தொடர்பாக வருகிற 8-ந்தேதி ஆலோ சனை கூட்டம் நடத்தப்பட்டு வார்டுகளில் தண்ணீர் பிரச்சினையை நிவர்த்தி செய்து கொடுக்கப்படும்.
நாகர்கோவில் மாநக ராட்சி பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு என்னென்ன பணிகள் செய்வது என முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற் காக ரூ.267.50 கோடிக்கு எஸ்டிமேட் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த நிதி கிடைத்தால் அனைத்து பணிகளும் செய்து முடிக் கப்படும்.
ஆய்வு செய்த அறிக்கை மற்றும் எஸ்டிமேட்டை குமரிக்கு வருகிற தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட உள்ளது. மேலும் தற்போது பல்வேறு திட்டங்களுக்காக நிதிகள் வந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறி னார். கூட்டத்தில் மண்டல தலைவர் செல்வகுமார், கவுன்சிலர்கள் அனிலா சுகுமாரன், டி.ஆர். செல்வம் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.